கிளிநொச்சியில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு திடீரென செப்பனிடப்படும் வீதிகள்!

74

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா செலவில் கடந்த அரசினால் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் நாளை மறுதினம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ள நிலையில்ஜனாதிபதி செல்லுகின்ற பிரதான பாதைக்கு அருகில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ள குறுக்கு வீதிகள் கிரவல் இடப்பட்டு தற்காலிகமா செப்பனிடப்படுகின்றது.

கடந்த ஆட்சிகாலங்களில் ஜனாதிபதியின் வருகையின் போது அவசர அவசரமாக வீதிகள் செப்பனிடப்படுவது போல் இவ் ஆட்சிக்காலங்களிலும் தொடர்கின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.