யாழில் இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு!

1925

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், இதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேற்படி வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து இடம்பெற்று வந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் அண்மைக் காலமாகக் குறைவடைந்திருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.