ஈழ அகதிகள் இந்தோனேசியாவில் நிர்க்கதி! – யாழ், இளைஞன் உயிரிழப்பு!

151

இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து புலம்பெயர்ந்து தமிழக அகதி முகாமொன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞன், அங்கிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டு இந்தோனேசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.