இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1200 அரிதான நட்சத்திர ஆமைகள் மீட்பு!

132

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1,200 அரிதான நட்சத்திர ஆமைகள் கற்பிட்டி, தில்லடிய கடற்கரை பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தடைசெய்யப்பட்ட இரசாயன திரவியமான கிளைபோசெட் 100 கிராம் அளவான 5, 400 சிறு பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நட்சத்திர ஆமைகளும், இரசாயனமும், இந்தியாவிலிருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு கற்பிட்டி பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.