அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; இந்தியர் ஒருவர் பலி!

இந்தியாவை சேர்ந்த 53 வயதான கருணாகர் காரெங்கிள் என்பவர் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி 10 மணியளவில் வேலையில் இருந்த போது முகமூடி அணிந்து வந்த இனந்தெரியாத இரு...

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு; காவல்துறையினர் விசாரணை!

ழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் ரோஷணைப் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், ராஜாராம் (46). கடலூர் போலீஸ் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிவரும் இவருக்கு சுமதி (40) என்ற...

காணாமல்போன 700 மீனவர்கள் மீட்பு: நிர்மலா சீதாராமன்!

ஓஹி புயலினால் பாதிக்கப்பட்டு காணாமல்போன 5 இலங்கை மீனவர்கள் உட்பட 700 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய கப்பற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மேற்கொண்ட மீட்பு பணிகளின்போது இவர்கள் மீட்கப்பட்டதாக அமைச்சரின் டுவிட்டர்...

பெண் கொலை; இந்திய முன்னணி கிரிக்கெட் வீரரின் தந்தை கைது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவரான அஜிங்க்யா ரஹானேயின் தந்தை மதுகர் ரஹானே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மதுகர், அவரது மனைவி மற்றும் மகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை வார விடுமுறையைக் கழிப்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, புனே-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத...

போர்க்களமான சென்னைப் பல்லவன் சாலை!

தமிழகப் போக்குவரத்து பணிமனைகளின் தலைமையகமான பல்லவன் இல்லம் இன்று மாலை தொழிலாளர்கள் போராட்டத்தால் போர்க்களமானது. ஊதிய உயர்வு, பணியின்போது உயிரிழக்கும் பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னைப் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். சி.ஐ.டி.யு, எல்.டி.எப் உள்ளிட்ட...

ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்: கௌசல்யா!

தமது கணவர் சங்கர் கௌரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தாய் உள்ளிட்ட மூன்று உறவினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, சங்கரின் மனைவி கௌசல்யா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் விடுதலை அடைந்தவர்கள் மீண்டும்...

இளம் தாயின் வக்கிரம்; ஆறு வயதுச் சிறுமி கழுத்தறுத்துக் கொலை!

தனது முறையற்ற உறவைப் பார்த்துவிட்ட ஆறு வயதுச் சிறுமியின் தாய், தனது காதலனுடன் சேர்ந்து தன் சொந்த மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது. டெல்லியின் காஸிப்பூரைச் சேர்ந்தவர் இந்த 30 வயதுப் பெண். நேற்று முன்தினம் புதனன்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது கணவர்...

கண்ணீரில் மிதந்த ஆய்வாளர் பெரியபாண்டியின் சொந்த ஊர்..! 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்

ராஜஸ்தானில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக நாதுராம், தினேஷ் சௌத்ரி என்கிற இருவரைப்  பிடிக்க ராஜஸ்தானுக்கு தமிழகப் போலீஸார்  தனிப்படை அமைத்துச் சென்றிருந்தனர். ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்க, தமிழக...

மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத 40 உடல்கள்: டி.என்.ஏ சோதனை நடத்த முடிவு!

ஒகி புயல் மீட்பு நடவடிக்கையின்போது கேரள அரசால் மீட்கப்பட்ட 40 உடல்கள், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் டி.என்.ஏ சோதனை நடத்தி உறவினர்களிடம் உடல்களை வழங்க அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஒகி புயலால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. ஆழகடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்களில்...

விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்!

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி கம்பி நீட்டி விட்டு, இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவின் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பாலான சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை...

மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

இந்த மாதம் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 12-ம் தேதி தனது 67 வது பிறந்த நாளைk கொண்டாடியபோதே ரஜினிகாந்த், ரசிகர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாத இறுதியில் ரசிகர்களைச் சந்திக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 8...

தாய், மாமன் விடுதலையை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்! கௌசல்யா

எல்லா வகையிலும் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன். அதுவரை என் சட்டப் போராட்டம் தொடரும் என உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வெளியானதும், தீர்க்கமான குரலில்...

கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவை எவை? – 7 சுவாரஸ்ய தகவல்கள்!

தேடுதல் தளமான கூகுள் தனது தேடுதல் பொறியில் இந்த ஆண்டு உலகம் முழுவதும் எந்தெந்த நாட்டில் எந்தெந்த விஷயங்கள் குறித்து மக்கள் அதிகளவு தேடியிருக்கிறார்கள் என்பது குறித்து பட்டியலிட்டுள்ளது. 1. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டது இர்மா சூறாவளி (HURRICANE IRMA) குறித்தே. இரண்டாவது இடத்தில் ஐஃபோன் 8...

சிதம்பரம் அருகே ஆளில்லா மூங்கில் தெப்பம்; புத்தர் சாயலில் குட்டி சிலை! – ஆச்சர்யத்தில் மீனவர்கள்

சிதம்பரம் அருகே ஆளில்லா தெப்பம் ஒன்று சிலை மற்றும் பூஜை பொருள்களுடன் கடலில் கரை ஒதுங்கியது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ளே எம்.ஜி.ஆர் திட்டு கடலில் மீனவர்கள் சிலர் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் மூங்கில் வேலைப்பாடுகளுடன்கூடிய அழகிய தெப்பம்...

தலித் மாணவி கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை : இன்று இறுதி தீர்ப்பு!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் மாணவி ஜிஷா கொலை வழக்கில் கைதான அமீருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவி ஜிஷா, பெரும்பாவூர் அருகே வட்டோலிப்படி என்ற இடத்தில் தனது...