28 C
Srilanka
Thursday, October 19, 2017

சுவிஸ் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட குடும்பஸ்தரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் !

சுவிற்சலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தை சேர்ந்த சுபராமணியம் கரன் என்னும் குடும்பஸ்தரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் நாளை(20) சுவிற்சலாந்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் சகோதரன் ஒருவரும் சுவிற்சலாந்து நோக்கி பயணமாக உள்ளார்கள். பார்வைக்கு 19.10.2017. வியாழக்கிழமை பி.ப13.30–19.00 -பார்வைக்கு.20.10.2017. வெள்ளிக்கிழமை மு.ப 09.00–பி.ப13.30வரை கிரியை 20.10.2017 வெள்ளிக்கிழமை பி.ப...

முல்லைத்தீவு விஜய் இரசிகர்களின் முன்னுதாரணமான செயற்பாடு!

தீபாவளி நாளான இன்றையதினம் இளையதளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான மெர்சல் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வரவை உலகில் உள்ள விஜய் இரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக கொண்டாடினார்கள். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள விஜய் இரசிகர்கள் பாரிய பதாதைகளை அமைத்து...

முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று நீரில்மூழ்கி பலியான மாணவர்கள்!

இன்றையதினம் தீபாவளி நாளை நண்பர்களுடன் கொண்டாடும் முகமாக முல்லைதேவு நகர பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்துக்கு சென்று கடலில் நீச்சலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களில் இருவர் அலையில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி இறந்துள்ளனர். 17வயது மற்றும் 18 வயதினை உடைய இரு மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி...

முல்லைத்தீவு கடலில் மூழ்கி காணாமல் போன இருவரில் ஒருவரை தேடும் பணிகள் தொடர்கிறது!

முல்லைத்தீவு கடலில் இன்றையதினம் மூழ்கி காணாமல் போன மாணவர்கள் இருவரில் ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டு வருகின்றது. தற்போது இரவு ஒன்பது மணியான நிலையில் மீட்பு பணியில் மந்தமான சூழலே நிலவுகின்றது. விசேடமாக சுழியோடிகள் வரவளைக்கபட்டு தேடும் பணிகள் முன்னெடுக்கபட்டது . இருந்தும் இதுவரையில் மற்றையவரின் சடலம்...

தாயும் மகனும் கொலை ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் 3 பேர் கைது!

ஏறாவூர் முருகன் கோவில் வீதி சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார். தீவிர விசாரணைகளின் பின் மோப்ப நாய்கள் இருவரை அடையாளம் காட்டியத்தை அடுத்து இவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுள்ளதாக...

வவுனியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்!

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நகரை நோக்கித் திரும்பிய கார் மோதியதாலேயே மேற்படி...

முல்லைத்தீவு கடலில் காணமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு கடலில் மூழ்கி  காணாமல்  போனவர்களில்  ஒருவரின் சடலம் சற்று முன்  மீட்கப்படுள்ளது. கடற்படை மற்றும் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் இடம்பெற்ற நிலையில் ஒருவரின் சடலம் மட்டும் மீட்க்கப் பட்டுள்ளது. மற்றயவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. https://youtu.be/MtB6s7ylmgw

எதிர்வரும் தேர்தல்களில் வடகிழக்கு பிரதேசத்தில்; தனித்து தனித் தமிழ் தரப்பினராக போட்டியிடுவேன்;கருணா!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால தேர்தல் திட்டங்கள் தொடர்பாக பல கட்சிகள் அடிப்படையில் சந்திப்புகளின் முதற்கட்டமாக இலங்கை பொது ஜன பெரமுனயின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நேற்று 17 பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை பொது ஜன பெரமுனயின் காரியாலத்தின்...

தீபாவளி நாளில் முல்லைத்தீவு கடலில் நிகழ்ந்த சோகம்,இரு மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்!

முல்லைத்தீவு நகரப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி...

சற்றுமுன் முல்லைத்தீவு கடலில் குளித்த இரு இளைஞர்கள் மாயம்!

முல்லைத்தீவு கடலில் நிராடுவதற்காக சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்கள். இவர்களை தேடும் பணியில் பொலிஸார் மீனவர்கள் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.   https://youtu.be/hqOkPwNI8xk

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைதுசெய்வோம்! – பொலிஸ்மா அதிபர்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவை மீறியே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதென குறிப்பிட்டுள்ள பொலிஸ்மா அதிபர்,...

மட்டக்களப்பில் இளம் தாயும் – மகனும் கொலை!! காரணம் வெளியானது!

மட்டக்களப்பு- ஏறாவூர் - சவுக்கடி பிரதேசத்தில் கட்டிலில் படுத்துறங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். (17.10.2017) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். தன்னாமுனை முருகன் கோயில் வீதியைச்சேர்ந்த 26 வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி மற்றும் அவரது மகன் 11 வயதுடைய...

தீபாவளியின் உண்மையான அர்த்தம் இதுதான்! பிரதமரின் வாழ்த்துச் செய்தி

உலக வாழ் இந்துக்கள் அனைவரும் இன்று தீபாவளியை கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு இலங்கை பிரதமரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா. இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞான ஒளியை இல்லாமற் செய்துவிடாமல் ஐக்கியமாக சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும். தீமை எனும் இருளிலிருந்து மீண்டு ஞானத்தின்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சாகும்வரையான உண்ணாவிரதம் இடைநிறுத்தம்!

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் விடுதலை கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தன சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு மாணவர்கள் கோரியிருந்தனர்....

தீபாவளியன்று கொடூரம்;தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை!

தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும்...