28 C
Srilanka
Thursday, October 19, 2017

ஆண்ட்ராய்டில் கூகுள் தேடல்களை அழிப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நீங்கள் மேற்கொண்ட கூகுள் தேடல்களை, உங்களது அனுபவத்தை மேம்படுத்த கூகுள் சேமித்து வைக்கும். இவ்வாறு சேமிக்கப்பட்ட தேடல்களை அழிப்பது எப்படி? உலகின் பிரபல தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனமான கூகுள், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் தேடல்களை சேவை மேம்பாட்டு காரணங்களுக்காக சேமித்து வைக்கும்....

வைபர், வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு இலங்கை கணனி பிரிவு விடுக்கும் அவசர எச்சரிக்கை!

இலங்கையில் இணைய தொடர்பாடல் செயலிகளான வைபர் - வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசியில் வைபர், வட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்தும் போது அவற்றிற்கான தரவு மற்றும் கடவுச்சொற்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேறு நபர்களின் தொலைபேசி...

கெத்தாக களமிறங்குகிறது ; ஹானர் 6சி ப்ரோ – அம்சங்கள் மற்றும் விலை.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹுவாய் நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பான ஹானர் 6சி ப்ரோவினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ஹானர் 6சியுடன் ஒப்பிடுகையில் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது ஹானர் 6சி ப்ரோ. அம்சங்கள் : ஹுவாய் நிறுவனம் வெளியிட்டுள்ள ஹானர் 6சி ப்ரோவானது,...

அறிமுகமாகின்றது 5G தொழில்நுட்பம்!

தற்போது காணப்படும் இணைய வேகத்தினை காட்டினும் சில மடங்கு அதிக வேகம் கொண்ட தொழில்நுட்பமே 5G ஆகும். இத் தொழில்நுட்பம் முழுமையாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் MIMO எனப்படும் சாதனத்தினை பயன்படுத்தி 4G தொழில்நுட்பத்தினை 5G ஆக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. MIMO எனப்படுவது Multiple...

அப்பிளை பின் தள்ளிய ஹுவாவி.!

  ஸ்மார்ட் போன் விற்பனை தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் இருந்த அப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி சீன நிறுவனமான அப்பிளை பின் தள்ளிய ஹுவாவி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இத் தரப்படுத்தலின் படி முதல் இடத்தில் சம்சுங் நிறுவனமும் இரண்டாம் இடத்தில் அப்பிளை பின் தள்ளிய ஹுவாவி நிறுவனமும்...

ஐபோன் 8 பிளஸ் பேட்டரி வெடித்து பாதியாக பிளக்கும் சம்பவங்கள் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் உள்ள பேட்டரி வெடித்து ஐபோன் பாதியாக பிளந்து கொள்ளும் சம்பவங்கள் சீனாவில் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் பேட்டரியில் ஏற்பட்ட பிழை போனினை பாதியாக பிளக்க வைத்த சம்பவங்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்...

நுகரும் திறனை இழப்பது மறதி நோய்க்கான அறிகுறி: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்.!

நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர். புதினா, மீன், ஆரஞ்சு, ரோஜா, பதனிடப்பட்ட தோல் ஆகியவற்றின் மணங்களை உணர முடியாதவர்களுக்கு,...

விவசாயிகளே ஈடுபடாத விவசாயம் – தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்தில் சாதனை!

உலகில் முதன்முறையாக, விவசாயிகளின் உதவியே இல்லாமல் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் விவசாயம் இங்கிலாந்தில நடைபெற்றுள்ளது. தானியங்கி டிராக்டர்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் இங்கிலாந்திலுள்ள ஹார்பர் ஆடம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை செயல்முறை படுத்தியுள்ளனர். இதனால் இனி வரும் காலங்களில் விவசாயிகள், விவசாயம் செய்யும் இயந்திரங்களை மேற்பார்வையிட்டால் மட்டும் போதும் என...

15 ஆண்டுகள் சுயநினைவின்றி இருந்தவரை அசைய வைத்த புதிய சிகிச்சை.!

சுமார் 15 ஆண்டு காலம் சுயநினைவற்ற நிலையில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு சுய நினைவை மீண்டும் பெற்றுள்ளார். கார் விபத்து ஒன்றில் காயமடைந்து சுயநினைவை இழந்த 35 வயதான ஒரு நபரின் நெஞ்சில், நரம்புகளின் செயல்பாடுகளைத் தூண்டும் ஒரு கருவியை...

அப்பிளின் Face ID டெமோ பிழைத்துப்போனது ஏன்?

அண்மையில் இடம்பெற்ற iPhone X அறிவிப்பு நிகழ்வில் iPhone X யின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சமான முக அங்கீகாரத்தை (Facial Recognition) அப்பிள் அறிவித்திருந்தது. இதுவரை காலமும் ஐபோனின் பாதுகாப்பு அளவீடாக இருந்த டச் ஐடி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக iPhone X யில் மிகவும்...

சீனாவில் களை கட்டிய சர்வதேச உலங்கு வானூர்தி கண்காட்சி

சீனாவின் ரைன்ஜின் மாநிலத்தில் 4ஆவது சீன சர்வதேச உலங்குவானூர்தி கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பபமாகியுள்ள குறித்த கண்காட்சியை சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வானூர்தி பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியில், இராணுவ பயன்பாட்டுக்கான Z-19 மற்றும் Z-11WB உலங்குவானூர்திகள் தங்கள் சாகசங்களைக் காட்டியிருந்தன. அத்துடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான...

சிலந்தி ரோபோ!

சிலந்தி வடிவலான புதிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். இதன் முன்புறமும் பின்புறமும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி நினைவக திறன் கொண்டது. காடுகளில் பல வகையான சிறிய உயிரினங்களை ஆய்வு செய்வதற்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது.

ஐபோன் 8 வெளியீட்டு விழாவில் வெளியானது ஐபோன் 10;அதன் புதிய சிறப்பம்சங்கள் என்னவென்று தெரியுமா!

அப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், வோட்ச் 3, டி.வி 4 கே உள்ளிட்ட தயாரிப்புகள் உலக சந்தையிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. உலகின் புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை...

எகிப்தில் புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு.!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மூன்று புதிய மம்மிகள் அகழ்வாராய்ச்சி நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்தின் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி ‘பிரமீடு’ எனப்படும் கல்லறையில் அடக்கம் செய்வது வழக்கம். அவ்வாறு பதப்படுத்தி வைக்கப்படும் உடல் ‘மம்மி’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய பல மம்மிக்கள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இந்த நிலையில் தற்போது...

புளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!

உயிருக்கு உலை வைக்கும் புளுவேல் விளையாட்டை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. புளூவேல் விளையாட்டை விளையாடி தமது உயிரை இளைஞர் யுவதிகள் என பலர் மாய்த்துக்கொள்ளும் சம்பவம் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு இந்தியாவில் பரவி, தமிழ்...