28 C
Srilanka
Thursday, October 19, 2017

வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்

வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங். அதே நேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சீனாவின் அரசியல், பொருளாதாரப்...

பனாமா ஆவணங்களை அம்பலப்படுத்திய பெண் ஊடகவியலாளர் படுகொலை!

உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் குலைநடுங்கச் செய்த ‘பனாமா ஆவணம்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை செய்யப்பட்டுள்ளார். மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதால்...

அமெரிக்கா கிறீன் கார்ட் விசா தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி

அமெரிக்காவில் கிறீன் கார்ட்க்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொழில்நுட்ப இடர்களால் தடைப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான பல்வகைப்பட்ட வீசா நிகழ்ச்சி, (DV - 2019 நிகழ்ச்சி) விண்ணப்ப காலம் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட...

பிரித்தானியாவில் கடும் புயல்!

ஒஃபலியா (Ophelia) புயல் தாக்குதலை அடுத்து இதுவரை மூவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் வெவ்வேறு விபத்துக்களால் ஆணொருவரும் பெண் ஒருவரும் உயிர் இழந்துள்ளனர். இவர்கள் பயணித்த வாகனத்தின் மீது புயற் காற்றால் மரங்கள் வீழ்ந்ததை அடுத்து இவர்கள் உயிரிழந்தனர். அத்தகைய விபத்தொன்றில் காயமுற்ற 70 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில்...

கொழுந்துவிட்டு எரியும் கலிஃபோர்னியா… திக்குமுக்காடும் தீயணைப்புப்படை…!

கலிஃபோர்னியாவில் கடந்த ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை சுமார் 40 பேர் இறந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் பற்றிய தகவல் தெரியவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காட்டுத் தீ, கிராமப்புற பகுதிகளை கடுமையாக பதம் பார்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. கொழுந்துவிட்டு எரியும்...

சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி!

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுவில் லொரி ஒன்றில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 230 பேர் பலியாகியுள்ளதுடன் 500 க்கும்    மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ள பரபரப்பு நிறைந்த சாலைகளை இலக்காக கொண்டு நேற்று...

தனிநாட்டுக்காக முழங்கும் கட்டலோனியா; விட்டுத்தருமா ஸ்பெயின்!

“நம் மொழி வேறு, நம் கலாசாரம் வேறு", என்பது அவர்களுக்குப் புரிகிறது. "சுயாட்சியை நாம் கைக்கொள்ளவேண்டும், ஏனெனில் நம்முடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றது", என்பதனை அவர்கள் உணர்கின்றார்கள்; அந்த உணர்வுதான் இன்று கட்டலோனியா மக்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கச் சொல்லி இருக்கிறது. ஐரோப்பாவின் வரலாறு என்பது எப்பொழுதும் சீராக இருந்தது கிடையாது. மிகநீண்ட...

விமானம் விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

ஐவரி கோஸ்ட்டில் விமானமொன்று திடீரென்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அபிட்ஜான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (சனிக்கிழமை) புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரான்ஸ் இராணுவத்தினருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு விமானமே விபத்துக்குள்ளானது. ஐவரி கோஷ்ட்டில் கன மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சீரற்ற...

மதவிரோத செயலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானில் 3 பேருக்கு மரண தண்டனை…!

பாகிஸ்தானில் மத விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 3 பேருக்கு பஞ்சாப் மாகாண கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானில் அகமதியா இனத்தினர் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று கூறிக்கொண்டாலும் அந்த நாடும், நாடு அரசும் இவர்கள் முஸ்லீம்களாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என்று 1974–ம் ஆண்டிலேயே...

தந்தையின் சமையலால் 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி தமது தந்தை கையால் சமைத்து சாப்பிட்ட, தமக்கு விருப்பமான உணவால் உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள ஹாரோ பகுதியில் குடியிருந்து வரும் 9 வயதான நைனிகா என்பவர்தான் தந்தை சமையலால் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தவர். பெற்றோருடன் குடியிருந்து வரும்...

தாய்வான் வங்கியில் கொள்கையிடப்பட்ட 20 கோடி ரூபா பணம் மீட்பு!

தாய்வான் வங்கியின் இணையப் பகுதிக்கு அத்துமீறி கொள்ளையிடப்பட்ட 20 கோடி ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஏ.எவ்.பி சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காட்டுத்தீயால் சின்னாபின்னமான கலிஃபோர்னியா!

கலிஃபோர்னியா மாகணாத்தின் திராட்சைத் தோட்ட பகுதிகள் கட்டுக்கடங்காத தீயினால் எரிந்து சாம்பலானது. அதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதிக அளவிலான மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருவதோடு, இதில் 1500 கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் வரை முழுவதுமாக அழிந்துள்ளன.   சோனோமா கவுண்டியில் மட்டும் 7 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள்...

அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிரான்ஸ்!

மீள்குடியேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய யூனியனில் இல்லாத நாடுகளிலிருந்து 10,000 அகதிகளை பிரான்ஸுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நேற்று அளித்த பேட்டியில், துருக்கி, ஜோர்டன், நைஜர், சாட் போன்ற நாடுகளிலிருந்து 10,000 அகதிகளை பிரான்ஸில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். இது குறித்து...

மெக்சிகோ சிறைச்சாலையில் மோதல் – 15 பேர் வரை பலி, 8 பேர் காயம்!

மெக்சிகோவில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றில் வெடித்த மோதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவின் வடபகுதியிலுள்ள நியுவோ லியோன் மாநிலத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையிலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு, சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள போராளிக் குழுக்களுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையில் கலவரம் இடம்பெற்றுள்ளது. போராளிக் குழுக்களைச்...

எங்கள் இறையாண்மையை அமெரிக்கா மீறி விட்டது: சீனா குற்றச்சாட்டு!

தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பலை அனுப்பியதன் மூலம் தங்கள் நாட்டு இறையாண்மையை அமெரிக்கா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, சீன நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளுடன் போட்டியிட்டு தெற்கு...