யார் செய்ய வழி இது ?
••••••••••••••••••••••••••••••
நெஞ்சம் தவிக்கிறது
துடிக்கும் உயிர்களைப் பார்க்கையில்
தஞ்சம் இன்றி இன்று
வீதியில் வாழ்க்கை
உணவு இன்றி உடையின்றி
உடல் சிதையும் நிலைமை……..
குடியிருந்த வீடு காணாமல் போகிறது
நீர் ஊற்றி வளர்த்த மரம்
வேரின்றித் தவழ்கிறது
சேர்த்து வைத்த சொத்தை
வெள்ளம் வந்து எடுக்கிறது
வெளிச்சத்தை இருள் கூடி மறைக்கிறது.
துன்பத்தை இன்பம் கொடுக்கிறது………
ஏன் இந்த அவல நிலை
வைகாசி 18 சிதைந்ததே உடல்கள் பல
இயற்கையால் அல்ல
இன்பத்தைத் தேடி வந்து
அழித்த காடையர் கூட்டத்தால்………
அன்று எங்கே உங்கள் உணர்வுகள்
அந்த நாளில் கூட அறியாத
யடமாக நடந்தீர்களே
வன்னி தேசத்தில் வீடுகளில்
உறவுகள் அய்யோ அய்யோ என்று
கதறித் துடிக்கின்ற போது………..
நீங்களோ வெளிச்சக் கூடு கட்டி
பட்டாசு கொழுத்தி
கொண்டாட்டம் செய்து
நடித்தீர்களே
வேதனையில் வாழ்ந்த
உணர்வுத் தமிழரை மறந்து………
இன்று எங்கே ! உங்கள்
வெளிச்சம் பட்டாசு கொண்டாட்டம்..
இதை யார் எடுத்தார்
யார் காட்டிய வழி இது
புரிந்து விடுங்கள்
சரிவில் இருந்து மீண்டு விடுவீர்கள்……
இறைவா எம்மை அறிவாய் நீ
தவிக்கின்ற ஒவ்வொருவருக்கும்
தாயாக நீயிருந்து காப்பாற்ற
வேண்டுகிறோம்………………….
#கிறுக்கன்

Jeevathas Meksan

 

 

0 Shares