வெள்ளையடிக்கப்பட்ட …
“இனத்தின் வலி”

விசாரிக்கப்படாத….
“மனித உரிமை மீறல்”

கூண்டில் ஏற்றப்படாத….
“போர்க்குற்றம்”

பூசி மெழுகப்பட்ட….
“இன விரிசல்”

பக்கங்கள் எரிக்கப்பட்ட…
“அழகிய புத்தகம்”

தீயினில் கருகிய “கலைவாணி”!
#யாழ்நூலகம்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டது 1981 ஜூன் மாதத்தில்…
மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து 1984 இல் நான் படித்த ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தையும் எரித்தார்கள். கூடவே ஆய்வுகூடத்தையும் கட்டிடங்களையும் தீவைத்து கொழுத்தினார்கள்.இது வரலாறு.அதை அறிந்து அதைப்பார்த்து கவலையால் மாரடைப்பால் இறந்தார் “ஹாட்லியின் “அதிபர்”!
இவற்றையெல்லாம் இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
#1984 பருத்தித்துறை படுகொலை(point pedro massacre)
1984 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சிறிலங்கா பொலிசார் சுடப்பட்டு இறந்தார்கள்.

அதற்கு “பழிதீர்க்கும்” முகமாக;
18 அப்பாவிப்பொதுமக்களை பருத்தித்துறையில் சுட்டுக்கொன்றார்கள்.
பல கடைகள் தீவைத்து கொழுத்தப்பட்டன.
பலர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
ஹாட்லிக்கல்லூரியின் நூலகம், ஆய்வுகூடம் எரிக்கப்பட்டது.
கட்டடங்கள் , தளபாடங்கள் சேதமாக்கப்பட்டன.
மாணவர் தங்குமிட விடுதியும் சேதமாக்கப்பட்டது.

On 16 September 1984, four Sri Lankan policemen were killed in combat near Thikkam . The Police responded by shooting between 16 and 18 civilians dead in Point Pedro. Police also burned shops and several Hartley College buildings in retaliation for the attack.
1984 Point Pedro massacre refers to the massacre of ethnic Sri Lankan Tamil civilians by the Sri Lankan Police in Point Pedro, a town in Northern Province, Sri Lanka. Police violence resulted in the deaths of at least 16 Tamils and also a high damage to the local property. The Hartley College library was burned down along with its laboratory reminiscent of the Burning of Jaffna library.
#தமிழ்ப்பொடியன்®

Sabaratnam Vimaleshwara

11 Shares