தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கில் ஏற்பட்ட “மாற்றத்தினால்” அதிருப்தியுற்ற அரசியல் அறிவுள்ள இளைஞர்கள் முன்னணியின் பக்கம் சரிந்து கொண்டிருக்கையில், தமிழ் மக்கள் பேரவையை அறிவார்ந்தவரும், நீதியரசரும், தமிழ் மக்களின் அதிக வாக்குககளைப் பெற்றவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையைக் கொண்டு வந்தனர்.

 

வேறு வழியற்ற முன்னணியும் பேரவையின் பக்கம் சரி ந்து, தமக்குருவாகிவந்த ஆதரவு அணியையும் பேரவைக்கு உவந்தளித்தனர்.அங்குகொஞ்சம் இங்குகொஞ்சமாக உருவாகியிருந்த தமிழ் தேசிய மீளெழுச்சியை வடக்கிலும், கிழக்கிலுமாக தெருவில் விட்டு, “இதில் எவ்வித அரசியலும் இல்லை – நாங்கள் யாருக்கும் எதிரியில்லை” என அறைகூவல் விடுத்ததுடன் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டனர்.

 

தமிழ் தேசிய அரசியலின் அடுத்த வீச்சு விக்கினேஸ்வரன் தலைமையிலான பேரவையே என நம்பிய அனைவருக்கும் விரைவாகவே வீபூதியடித்தனர். ஆக முன்னணி பக்கம் உருவாகிவந்த ஆதரவை உடைத்துப் போட்ட வேலையைத்தான் பேரவை வெற்றிகரமாக செய்துமுடித்தது.

 

அடுத்து, வடமாகாண சபை. தீர்மானம் போட்டதைத்தவிர சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றுமே செய்யாவிட்டாலும், வந்துபோதுகும் வெளிநாட்டவர் நம்பிக்கையுடன் கைலாகு கொடுக்கும் அவையாக செயற்பட்டுவந்தது. வடக்கு தமிழரின் கூட்டு அடையளமாக வட மாகாண சபையையும், விக்கினேஸ்வரனையும் பார்த்தனர். அவரும் வடக்கின் அரசியல் மனநிலையைக் கற்று அதற்கேற்றாற்போல தன்னை உருமாற்றி வந்தார் என்பதைக் கவனித்திருக்கிறோம். அந்த மாற்றங்களுக்கு வடமாகாண சபையின் அமைச்சர்களான ஐங்கரநேசனும், குருகுலராஜாவும் காரணம் என அரசல்புரசலாக வெளிவந்த கதைகளையும் அறிந்திருக்கிறோம்.

 

பேரவையின் உருவாக்கத்தோடு தெம்படைந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போதும், நல்லாட்சியின் முக்கிய காய்நகர்த்தல்களின்போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகியிருந்தார். கூட்டமைப்பினர் தம் வழிக்குக் கொண்டுவர பல அழுத்தங்களை – கூக்குரல்களை எழுப்பியபோதும் சாந்தமாகப் பதிலளித்து செக் வைத்துக்கொண்டிருந்தார் முதலமைச்சர்.

 

எனவே தான் அவரின் தர்ம நீதியின்படியே பழியிடப்பட்டார். எப்போதும்“கூட” இருந்தவர்களையே விசாரித்து தீர்ப்பளிக்கும் செயல்நிலைக்குத் தள்ளப்பட்டார். தீர்ப்பும் அளித்துவிட்டார்.

அடுத்தென்ன, ஒன்றில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூட்டடைமப்பின் தாளத்திற்கு ஆடும் பொம்மையாக வேண்டும், அல்லது தன் ஆசனத்தை கூட்டமைப்பு விரும்பும் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகம் போலவே இங்கும் மக்கள் எவ்வித விழிப்பும் அற்ற நிலையில் மந்தைகளாகிவிட்டனர். எனவே இங்கும் ஒரு எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ வலம் வருவர். தெற்கு தான் நினைத்த அரசியலை எவ்வித தடையுமின்றி நடத்திச் செல்லும்.

முதலமைச்சரைக் கொண்டு செய்து முடித்தவைகள்….!தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கில் ஏற்பட்ட “மாற்றத்தினால்” அதிருப்தியுற்ற…

Posted by Jera Thampi on Wednesday, June 14, 2017

Jera Thampi

80 Shares