விவேகானந்தர் தனது புகழ்பெற்ற, ‘அமெரிக்க நாட்டு சகோதர சகோதரிகளே…!’ உரையின் பின்னர் சிக்காக்கோவின் விடுதியொன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பிரபல காப்பிகடையான (coffee shop) ‘ரொபி எஸ்டேட்டோ’, தனது புதிய கிளை ஒன்றினை சிக்காக்கோ நகரத்தில் திறந்திருந்தது. விவேகானந்தர் அங்கே வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர்.

அவர் அங்கே சென்றபொழுது, அந்தக்கடையின் நிர்வாகியான பெண்மணி, மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். உங்களுக்காக முற்றிலும் புதியதொரு காப்பி வகையை உங்கள் அனுமதியுடன் தயாரிக்க விரும்புகிறேன். இன்று முதல் புதிதாய் அறிமுகம் செய்ய இருக்கிறேன் என்றார்.

உடனே விவேகானந்தர், “அதெல்லாம் வேண்டாம் எனக்கு ஐஸ் கஃபே லாட்டே போதும்” என்றார். அந்தப்பெண்மணி புன்னகையுடன் தலையசைத்துச் சென்றார்.

உடனிருந்த சிக்காக்கோ சிவன் கோவில் தர்மகர்த்தா, “ஏன் சுவாமி மறுத்தீர்கள்? அவர்தான் எவ்வளவு ஆர்வமாக உங்களுக்காக…”. குழப்பத்துடன் கேட்டார்.

விவேகானந்தர் புன்னகையுடன் கூறினார், “அந்தச் சிக்காக்கோ நாட்டு சகோதரியின் அன்பை மதிக்கிறேன். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவது ஆரோக்கியமானதுதான். ஆனால் அதை நம்மீதே பரிசோதிப்பது நமக்கு ஆரோக்கியமானதல்ல”.

உமாஜீ

0 Shares