பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும்! -டெனீஸ்­வ­ரன்

357

நான் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­க­மாட்­டேன். முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருந்­தால் அதைப் பயன்­ப­டுத்தி என்னை நீக்­கட்­டும். அவர் நீதி­ய­ர­சர் என்­றால் நான் சட்­டத்­த­ரணி. என்­னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­னால் என்ன செய்ய வேண்­டும் என்­பது எனக்­குத் தெரி­யும்.

இவ்­வாறு ஆணித்­த­ர­மா­கச் சவால் விட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன்.வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப் போவ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னான கூட்­டத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இது குறித்து அதி­ருப்தி அடைந்த தமிழ் அர­சுக் கட்சி, அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­ப­தில்லை என்ற முடிவை எடுத்­தது. அதை அடுத்து சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தனது பத­வி­யி­லி­ருந்து வில­கி­னார். எஞ்­சி­யி­ருக்­கும் ஒரே அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­ னின் நிலைப்­பாடு என்ன என்று உத­யன் பத்­தி­ரிகை அவ­ரி­டம் வின­வி­யது.

‘‘நான் எந்­தக் குற்­ற­மும் செய்­ய­வில்லை. விசா­ர­ணைக் குழு­வும் அத­னைச் சொல்­லி­யி­ருந்­தது. என் மீதான குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் தண்­ட­னையை ஏற்­கத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தேன்.

முத­ல­மைச்­சர் சுயா­தீ­ன­ மான சட்­ட­ரீ­தி­யான தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­தால் அந்த விசா­ர­ணைக்­கு­ழு­வில் தோன்­று­வ­தற்கு இப்­போ­தும் தயா­ரா­கவே இருக்­கின்­றேன். நான் விசா­ர­ணை­யைக் கண்டு ஓடி ஒளி­ய­வில்லை.

நான் எனது பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்­டிய தேவை இல்லை. பதவி வில­கல் கடி­த­மும் கொடுக்­க­மாட்­டேன். முத­ல­மைச்­ச­ருக்கு அதி­காம் இருந்­தால் அதைப் பயன்­ப­டுத்தி என்னை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­லாம்.

அவர் அவ்­வாறு செய்­தால் அதற்­கு­ரிய சட்­ட­ரீ­தி­யான பதி­ல­டியை நான் கொடுப்­பேன். அவர் நீதி­ய­ர­சர் என்­றால் நான் சட்­டத்­த­ரணி என்­பதை நினை­வில் கொள்­ளட்­டும்’’ – என்­றார் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன்.