பாஸ்கரன் – 50வது பிறந்தநாள்

0
148

அண்ணனாய் வந்துதித்த
அன்னையே வாழ்க
எங்கள் அம்மா தந்த – இன்னுமொரு
அம்மாவே வாழ்க
பாஸ்கரன் இது ஒரு பெயர் மடடுமல்ல
பாஸ்கரன் ஒரு வரலாறு
பாஸ்கரன் ஒரு யுகம்
பாஸ்கரன் ஒரு சரித்திரம்
எமக்கு மட்டுமல்ல எம்மை
உருவாக்கியவர்களுக்கும்
பெரியவன் – நீ தான்
வேசம் போடத்தெரியாத
பாசக்காறனே வாழ்க
தேசம் காத்தவனின் குணம் உனது
வீசும் காற்று நின்று போனாலும் எமக்கான
உன் பாடுகளை – மறவோம் நாம்
காசும் பணமும் உன் கால் தூசு
பேசும் போது நீ
வீசும் தென்றல் காற்று
உனை போற்றி போற்றியே எம்
ஆயுழ் முடிக்க அருள் புரிக!
உன் பிஞ்சு வயதிலேயே – எம்மை உன்
குஞ்சுகளாய் காத்தவன் நீ
வஞ்சம் அறியா உன் நெங்சருகில்
தஞ்சை பெருங்கோவிலும் சிறிது எமக்கு
மதியாதோர் வாசல் மிதிக்காமல்
எம்மை வளர்த்து வழிநடத்தும் வள்ளலே வாழ்க
பாசத்திலும் கோவத்திலும் முதல்வனே – வாழ்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று
முளையிலேயே ஊட்டியவன் நீ
எங்கள் அனைவரையும் செதுக்கிய சிற்பியே – வாழ்க
சகோதரத்துவம் என்னும் பட்டயத்தின் பீடாதிபதியே – வாழ்க
ஆகாயத்தை அளவிடலாம் -உன்
அன்பை அளவிட யாரால் முடியும்?
எம்மை பள்ளிக்கு அனுப்பவதற்காய்
கல்வி துறந்த தியாகியே – வாழ்க
நாம் கண்ட அனர்த்தங்களின்போதெல்லாம்
எம்மை அரவணைத்த காவலனே – வாழ்க
மொத்தத்தில் – நீ தான் நாங்கள்
நாங்கள் தான் நீ
வாழ்க பல நூறாண்டு
எங்கள் தலைவனாய்;
எங்கள் பெரியவனாய்
எங்கள் அண்ணனாய்
எங்கள் அனைத்துமாய்
வாழ்க வாழ்க வாழ்க…

அன்புடன் தம்பி சிவகுமார்

0 Shares