கொண்டாடு
கூக்காட்டு
விசிலடி
கத்து
குழறு!

படம் பார்
படம் மட்டும் பார்!

ஆரும் உன்னை கேக்கவும் இல்லை
ஆரும் உதுகளை பாக்கவும் இல்லை.

இது நடக்கும் எண்டு
எல்லாருக்கும் தெரியும்!
இப்பிடி கெதியில
நடந்ததுதான் வருத்தம்!

உன் அப்பாவின் சாரம் ஓட்டை..
உன் அம்மாவின் சேலை கந்தல்…
தங்கையின் சட்டை கிழியல்…
கவனித்தாயா?

அதுசரி;
உனக்கெங்க நேரம்!
ஆனாலும் நீ அடிச்ச “கட்டவுட்”
அழகுதான்!

குளிரிலும் பனியிலும்
பாலைவன வெக்கையிலும்
உன் அண்ணாவோ
உன் அக்காவோ
சிந்தும் வியர்வையை விட..
நீ ஊத்தும் பால் தடிப்புத்தான்!

கொண்டாடு
கூக்காட்டு
விசிலடி
கத்து
குழறு!!!

தியேட்டர் வாசலில் வைச்சு
“ரிக்கற்றை”கிழிச்சு எறி!

“பொக்கற்றுக்குள்” கொண்டு திரியாத!
“இருட்டை”விட்டு வெளியில் வரும்போது;
மிகத்தெளிவாய் வா!

#தமிழ்ப்பொடியன்

கொண்டாடுகூக்காட்டுவிசிலடிகத்துகுழறு!படம் பார்படம் மட்டும் பார்!ஆரும் உன்னை கேக்கவும் இல்லைஆரும் உதுகளை…

Posted by Sabaratnam Vimaleshwara on Wednesday, August 23, 2017

34 Shares