இலங்கை மக்கள் அச்சப்பட தேவையில்லை! சர்வதேச ஊடகம் வெளியிட்ட தகவல்!

374

இந்தியாவில் 5.5 டிச்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பூமியதிர்ச்சி அந்த நாட்டு நேரப்படி இரவு 8.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த பூமியதிர்ச்சி புதுடில்லி நகரில் உணரப்பட்ட போதிலும் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த அதிர்வு மற்றும் அண்மையில் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் வட பகுதி மீனவர்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த பூமியதிர்ச்சியினால் எவ்வித சுனாமி ஆபத்துக்களும் ஏற்படப்போவதில்லை எனவும் கரையோர பிரதேசத்தில் வாழும் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.