பாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்த பின் குடிக்க வேண்டும்.

அதுவும் இந்த பூண்டு பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக உள்ளது.

பூண்டு பாலை குடிப்பதன் நன்மைகள்
செரிமானப் பிரச்சனை, சளி மற்றும் காய்ச்சல் ஆகிய பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவினால் முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வுத் தொல்லை மற்றும் கால்வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் ஆகிய நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்தால் தாய்ப்பாலின் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வயிற்றுப் புழுக்கள் அழிந்து, நுரையீரல் அழற்சி பிரச்சனை விரைவில் குணமாகும்.

16 Shares