எலுமிச்சையில் அதிகப்படியாக விட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவில்லாமல் கிடைக்கும்.

அதோடு அதன் தோளில் விட்டமின் A, C, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

எலுமிச்சையின் அற்புத நன்மைகள்
இரவு படுக்க செல்லும் முன் எலுமிச்சைப் பழத்தில் பாதியை முகத்தில் தடவிக் கொண்டு காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பான அழகுடன் இருக்கும்.
எலுமிச்சை பழத் தோலுடன் உப்பைச் சேர்த்து காய வைத்து அதை பவுடராக்கி பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
பிரிட்ஜில் எலுமிச்சை தோல் வைத்தால் மணக்கும். அதனால் பிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வராது.
எலுமிச்சையின் தோல் மிகவும் நறுமணம் மிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
எலுமிச்சையின் தோல் நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்களை வளரத் தூண்டுகிறது.
எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்திற்கு ஸ்க்ரப் செய்யலாம்.
எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.
கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பின் எலுமிச்சை தோலை நகங்களின் மீது தேய்த்து கழுவி விட வேண்டும். இதனால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.
எலுமிச்சை தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வர பற்களின் மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து வெண்மை அடையும்.
எலுமிச்சை தோலுடன் ஒயிட் வினிகர் கலந்து அதை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் 2 வாரம் வைத்து அதை கிரானைட் மற்றும் மார்பில் தவிர அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம்.
வீட்டில் எறும்பு, கரப்பான் தொல்லை இருந்தால் உடனே எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும்.

17 Shares