வாழைப்பழத்தையும் முட்டையையும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா? சில உணவுகளை நீங்கள் ஒன்றாக சாப்பிடும் போது அவை ஒன்றோடொன்று இணைந்து வேதியியல் மாற்றம் அடைந்து வேற விதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஏன் நாம் தினசரி குடிக்கும் பாலை கூட ஆரஞ்சு ஜூஸூடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா.

ஆமாங்க பாலில் உள்ள கேசின் புரோட்டீன் ஆரஞ்சு ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்து தயிராக மாறி விடும்.

அப்படி இருக்கையில் முட்டையும் வாழைப்பழத்தையும் சேர்ந்து சாப்பிடலாமா என்ற குழப்பத்தை போக்குவது தான் இந்த கட்டுரை. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

வாழைப்பழமும் முட்டையும் ஒரே நேரத்தில் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டதால் ஒருவர் மரணமடைந்துவிட்டதாக சில செய்திகள் பரவுகின்றன.

உண்மையிலேயே வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் மரணம் உண்டாகிற அளவுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வாழைப்பழத்தை பொருத்தவரை நிறைய விட்டமின்கள், தாதுக்கள், மாங்கனீஸ், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், 1-2 கிராம் புரோட்டீன், நார்ச்சத்து, 80 கலோரிகள் போன்றவற்றை நமக்கு தருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

முட்டை யிலும் விட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், அதிக அளவில் புரோட்டீன் போன்றவைகள் உள்ளன.

கவனத்தில் வைக்க வேண்டியவை

நிறைய உடற்பயிற்சியாளர்கள் தினமும் ஒரு பெரிய தவறை செய்து வருகிறார்கள். எல்லோரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும், தசைகளை வலிமையாக்கவும் வைத்திருப்பதற்காக உடற்பயிற்சியோடு உணவு டயட்டையும் மேற்கொள்கிறார்கள்.

முட்டையும், வாழைப்பழமும் தான் அவர்களின் பொதுவான டயட்டாக இருக்கும். இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக உடற்பயிற்சி செய்வதற்கு முன் எடுத்து கொள்வது என்பது முற்றிலும் தவறு.

ஏனெனில் இந்த இரண்டு உணவுகளும் கலோரி அதிகமான உணவு என்பதால் உங்கள் சீரண மண்டலம் இதை சீரணிக்க மிகவும் சிரமப்படும். இதனால் சீரணமின்மை, வயிறு கோளாறுகள் போன்றவை ஏற்படலாம்.

எனவே இதை உடற்பயிற்சிக்கு பின்னோ அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்போ எடுத்து கொண்டு பயன் பெறுங்கள்.

நிறைய பெண்கள் மலட்டுத்தன்மை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, விட்டமின் டி குறைபாடு போன்றவை இதற்கு காரணமாக அமைகிறது.

ஆனால் வாழைப்பழம் ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்கிறது. மேலும் முட்டையில் விட்டமின் டி அதிகம் இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் விட்டமின் டி பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

எனவே இந்த இரண்டு உணவுகளும் பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கி கருவுறுதலுக்கு உதவுகிறது

முட்டையும் வாழைப்பழத்தையும் ஒரு சேர சாப்பிடக் கூடாது என்று நிறைய கட்டுக் கதைகள் முன்னர் வந்துள்ளனர்.

ஒருவர் கூட இந்த மாதிரி சாப்பிட்டு திடீரென்று இறந்து விட்டார் போன்ற புரளிகள் வெளி வந்தன. ஆனால் இது எல்லாம் உண்மையல்ல.

முட்டையையும் வாழைப்பழத்தையும் ஒரு சேர நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். அது உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

ஒரு சில பேருக்கு இந்த காம்பினேஷன் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் எல்லாருக்கும் இது ஒத்துக் கொள்ளாது என்பது முற்றிலும் தவறு. எனவே எந்த புரளிகளையும் நம்புவதற்கு முன் ஆராய்ந்து செயல்படுங்கள்.

51 Shares