எனது முதல் இசை நிகழ்வு இலங்கையில் ஆரம்பமானது அதேபோல அதிகமான இசை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளதும் இலங்கையில் தான் கடந்த 2005ஆம் ஆண்டு கிளிநொச்சிப்பகுதியில் தயாகப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்துகொள்வதற்காக எனது தாயாருடன் சென்றிருந்தேன் சென்னையிலிருந்தும் அதிகமான தாயகப்பாடல்கள் பாடியிருக்கின்றேன்.

அதே நேரம் தாயகத்திற்கும் வந்து பாடியிருக்கின்றேன். இதனால் எனக்கு இலங்கையில் பல நண்பர்கள் இருந்தார்கள் இன்று பலர் உயிருடன் இல்லை சிலபேர் வேறு நாட்டில் இருக்கின்றார்கள். அந்த நினைவுகள் எனக்கு ஞாபகம் வருகின்றது மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றபோது நான் அழுததைவிட எனது தாயார் அங்கு அதிகமாக கதறி அழுதிருந்தார். அந்த இடத்தைப்பார்த்து அந்த இடத்திலே நிறைய நண்பர்கள், சகோதரர்கள், உடன்பிறப்புக்கள் இருந்தார்கள்.

அடிப்படையில் உலகத்தில் எவ்வளவு மக்கள் எவ்வாறான கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள் அதிலே முக்கியமாக நமது மக்கள் அதிகமாகவே இழந்துள்ளார்கள் இதற்குமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை நமது மக்கள் இழந்த எதையும் எங்களால் திருப்பித்தரமுடியாது எதையுமே ஆனால் ஒரு நான்கு மணிநேரம் கஷ்டங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து நல்ல இசையைக்கேட்டுககொள்வதற்கு ஒரு சந்தோசத்தைக் கொடுக்க முடியும் அதை நாங்கள் பெருமையாகவே நினைத்துக்கொள்கின்றோம்.

இவ்வாறு வவுனியாவில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தென்னிந்தியாவின் பிரபல பாடகியான கல்பனா நேற்று மாலை 5.30மணியளவில் பிறிஸ்சஸ் றோசஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது, இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு முன்பாக வந்து பாடுவது எனக்கு மிகவும் விஷேசமானது இதை நான் மனதாரவே சொல்லுகின்றேன். அதேபோல இங்குள்ள இசைக்கலைஞர்களின் திறமைகளுக்கு குறைவு என்பது இல்லை அது எவராக இருந்தாலும் திறமை என்பது நிறையவே காணப்படுகின்றது அவர்களுக்கு பயிற்சி மட்டும் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் வேறு நிலைக்குச் சென்றுவிடுவார்கள். இதை நான் இங்கு வந்து பார்த்த உண்மை பயற்சி என்பது ஒரு கலைக்கு அல்லது எந்த ஒரு வேலைக்கும் சரி மிகவும் முக்கியமானது அந்தப்பயிற்சி கிடைக்காதுபோதும் இவ்வளவு தூரம் செய்கின்றார்கள் என்றால் முறையான பயிற்சி கிடைத்தால் வேறு ஒரு நிலையில் இருப்பார்கள் என்பது மாற்றம் இல்லாத உறுதியான எனது கருத்து.

இசையில் ஆர்வம் உள்ளவர்கள் விருப்பம் உள்ளவர்கள் முனவரவேண்டும் மாலை 6மணியளவில் ஒரே ஒரு வெளிச்சம் எங்கோ ஒரு இடத்தில் காணப்பட்ட அந்தக்காலத்தை; நான் இந்த இடங்களில் பார்த்திருக்கின்றேன். அவ்வாறான ஒரு நிலையில் ஒரு இசை அமைப்பாளரை என்னால் பார்க்க முடிந்துள்ளது ஒரு பாடலாசிரியரை என்னால் பார்க்க முடிந்துள்ளது ஒரு பாடகரை என்னால் பார்க்க முடிந்துள்ளது அவர்களுக்கு எங்களைப்போல பயிற்சிகள் கிடைக்குமாக இருந்தால் வேறு நிலைமைக்குச் சென்றிடுவார்கள். எனக்கு ஒரு விருப்பம் உள்ளது இங்கு இருப்பவர்களுக்கு பயிற்சிகள் வழங்கவேண்டும் என்ற விருப்பம் வந்துள்ளது.

கடவுளின் சித்தமாக இருந்தால் எதிர்காலத்தில் பார்க்கலாம் என்று மேலம் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

 

20 Shares