இந்த கட்டுரையை விகடன் தளத்திலிருந்து பிரதியெடுத்தேன். தவறை மனதார உணர்ந்து மன்னிப்பு வேண்டுகிற இந்த விளையாட்டு வீரர்களின் உருக்கம் நெஞ்சை பிசைகிறது.

தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக உலகின் கண்களின் முன்னால் அவர்கள் சிந்துகிற கண்ணீரிலும் சோகத்திலும் பொய்யில்லை.

உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய ஆள்பதிகள் தான் நினைவுக்கு வந்தனர்.

உள்ளுராட்சி சபைகளின் ஆட்சி என்கிற அற்ப வெற்றிக்காக நீங்கள் இழைத்திருக்கிற வரலாற்று துரோகம் – தமிழ் தேசியத்தின் மீது பற்றுடைய இளவல்களுக்கு தவறான வழிகாட்டுதல் இல்லையா?

உரிமையை விட உணவே பெரிதெனில், போன முப்பதாண்டு குருதி விழலுக்கிறைத்ததா?

அபிவிருத்தியின் பெயரால் நீங்கள் அடகிட்டிருக்கிற, ‘வேட்கை’ – தேவையில்லாத சுமை என்ற எண்ணத்தை உங்கள் தம்பிகளிடத்தில் சேர்க்கும் என்ற ஆகக்குறைந்த முன்னெச்சரிக்கை கூட ஏன் முனைக்கவில்லை?

இந்தப் பெரும்பாவத்தை எப்படிக் கழுவ?

வெறும் மைதானத்தவறுக்கு கண்ணீர் சிந்தி – உள்ளுணர்வோடு வருந்தி மன்னிப்பு வேண்டும் வீரர்களின் வயதைப்போல மூன்று மடங்கு வருடங்கள் அரசியல் செய்தவர்களிடம் ஏன் கொஞ்சமும் நாகரிக வளர்ச்சியோ முதிர்ச்சியோ இல்லை?

காலத்தை மறந்து நீங்கள் செய்திருக்கிற மாதுரோகத்தை நியாயப்படுத்த இரண்டு நிகழ்தகவுகளே உள்ளன.

ஒன்று :- நீங்கள் செய்திருப்பது தவறேயல்ல. நாங்கள் தான் அநியாயத்துக்கு அந்நியப்படுகிறோம்.

இரண்டு :- நீங்கள் மனிதர்களே இல்லை. பணமிருகங்கள்!

/// நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்” என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்?

“நான் தவறு செய்துவிட்டேன். நான் பொய் சொல்லிவிட்டேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழிவைத் தேடித்தந்துவிட்டேன். ஆஸ்திரேலியக் குழந்தைகளும், உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கும் நாங்கள் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்”
என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்?

தென்னாப்ரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வந்திறங்கியதுமே ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவரும் செய்தியாளர்களைத் தனித்தனியாக சந்தித்தினர்.
ஸ்மித் தன் தந்தையோடு செய்தியாளர்களை சந்திக்க, பேங்க்ராஃப்ட் தன் அம்மாவோடு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

காரணம் தன்னுடைய குடும்பத்துக்கும், தன்னை வளர்த்தவர்களுக்கும் மிகப்பெரிய துரோகமும், தவறும் செய்துவிட்டவர்களாக அவர்கள் உணர்ந்துதான். முதலில் குடும்பத்திடம் மன்னிப்புக்கேட்டு, குடும்பத்தின் துணையோடு செய்தியாளர்களைச் சந்தித்தனர் அந்த ஆஸ்திரேலியர்கள்.

இந்தியாவில்தான் குடும்பம் என்னும் கட்டுமானம் சிதையாமல் இருப்பதாக எண்ணுகிறோம். அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் எல்லாம் குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் ஒன்று இல்லை என்று நினைக்கிறோம். அது மிகமிகத் தவறு என்பதற்கான உதாரணங்கள்தான் ஸ்மித், பேங்க்ராஃப்ட் சர்ச்சைகள்.

இவர்கள் ஏன் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் என்றால் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியம். நாளைய தலைவர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் நாட்டை வழி நடத்தப்போகிறவர்களும், நாட்டுக்குப் பெருமை சேர்க்கப்போகிறவர்களும் அவர்கள்தான். அவர்களுக்கு நல்ல ரோல் மாடல்கள் இல்லை என்றால் நாளைய சமுதாயமும் சீரழியும். அதைச் செய்துவிட்டதால்தான் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறார்கள்.

குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல்களாக இருக்க வேண்டும்’ என்பதுதான் நாம் நம்முடைய எதிர்பார்ப்பு. இதோ ஐ.பி.எல் தொடங்குகிறது. ஒவ்வொரு அணிகளும் வெற்றிக்காக வெறிகொண்டு மோதலாம் தவறில்லை. ஆனால், எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கும் ஆட்டமாக அதுமாறிவிடக்கூடாது. ஸ்பாட் ஃபிக்ஸிங் ஏதோ ஒரு முறை நடந்துவிட்டது என்பது அல்ல. எது எப்போது வேண்டுமானாலும், எந்த அணியில் வேண்டுமானாலும், எந்த வீரரிடம் வேண்டுமானாலும் நடக்கலாம்.

விளையாட்டு வீரர்களே… உலகின் பெருமைமிகு விளையாட்டுத் தூதுவர்களே… குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் மனதில்வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் எப்போதும் நம்மை மன்னிக்கத் தயராகயிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு நல்ல ரோல் மாடலாக இருக்கிறோமா? \\\

Aathavan Gnana

கேப்டவுன் டெஸ்டும் – யாழ்ப்பாண மாநகர சபையும். இந்த கட்டுரையை விகடன் தளத்திலிருந்து பிரதியெடுத்தேன். தவறை மனதார…

Posted by Aathavan Gnana on Friday, March 30, 2018

18 Shares