முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசம் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் முகமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடத்தப்படும் மாபெரும் சந்ததை வர்த்தக கண்காட்சி ஒன்று புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும் கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி க.ஜெயபவானி,புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி முகாமையாளர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

வர்த்தக கண்காட்சியனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் திறந்துவைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பலர் தங்கள் சுயமுயற்சியினை மேற்கொண்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமையுடன் தேசியத்தில் இரண்டாம் கிடைத்த பல உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்தியுள்ளார்கள் இன்றும் நாளையும் இந்த வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தேசிய மட்டத்தில் சமுர்த்திணைக்கழத்தினால் நடத்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கான போட்டியின்போது முதல் இடங்களை பெற்ற உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கௌரவிப்பினை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிவைத்துள்ளார்.

சமுர்த்தி திணைக்கழத்தால் நடத்தப்பட்ட கெற்குழு சிறுவர் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குhன சன்றிதழ்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்.

32 Shares