வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களை கட்டியுள்ளது.

பிறக்க இருக்கும் தமிழ்,சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் வவுனியா பழைய பேரூந்து நிலையம் , மணிக்கூட்டு கோபுர சந்தியடி , அங்காடி வியாபாரி நிலையம் , புகையிரத வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் வழமை போன்றே காணப்படுகின்றது.

வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகாமையில் இன்றுடன் 414வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது உறவுகளை தேடி சுழற்சி முறையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

18 Shares