வரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா?

“அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?”

”அரச்ச மாவையே இன்னும் எத்தன நாளைக்கு தான் அரைப்பிங்க ?”

“இன்னும் எத்தனை பேரு இப்படி கெளம்பிருக்கீங்க ?”

இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இந்த சதிகோட்பாளர்கள் சும்மா இருந்தால் தானே (Conspiracy theorists)

வானில் இருக்கும் நட்சத்திர கூட்டங்கள் அனைத்தும் ஒவ்வொறு வடிவத்தை பிரதிபலிப்பது போன்று இருக்கும்.

  • தராசு வடிவம்
  • சிங்க வடிவம்
  • கன்னி வடிவம்
  • ஹெர்கியூலிஸ் வடிவம்

இப்படி பல வடிவங்கள் உண்டு, நாம் பிறக்கும் போது நம் பூமிக்கு அருகில் எந்த நட்சத்திரக்கூட்டம் உள்ளதோ அது தான் நமது ராசியாக ஜாதகத்தில் கூறப்படுகிறது.

இதில் விர்கோ எனப்படும் கன்னி வடிவ நட்சத்திரக்கூட்டம் ஒன்று உள்ளது. அவைகள் ஒரு பெண் நிற்பதைப் போன்ற தோற்றதைத் தரும். சில நட்சத்திரங்கள் கன்னியின் தலையில் கிரீடம் போன்றும் இருக்கும்.

நாம் பூமியில் இருந்து பார்க்கும் வேலையில் கிரகங்கள் நகரும்போது அந்த வடிவத்தில்

  • சூரியன் கன்னியின் தலைக்குப் பக்கமும்
  • வியாழன் கன்னியின் கால்களுக்கு நடுவிலும்
  • நிலவு கன்னியின் காலுக்கடியிலும்

என்று கிட்டத்தட்ட இந்த மூன்று கிரகங்களும் நேர்க்கோட்டில் என்று வருகிறதோ அந்த நாளே பைபில் கூறும் தீர்ப்பு நாள் ஆகும். அதாவது Judgement Day.

இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று கிரகங்களும் நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு நாளை மறுநாளான ஏப்ரல் 23ம் தேதி நடக்கப்போகிறது.

இதை முன்னிட்டு தான் உலகில் தற்போது அதிகளவில் அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இவைகள் Judgement Day-ன் அறிகுறிகள் என டேவிட் மீடே எனும் சதிக்கோட்பாட்டாளர் (Conspiracy theorists) கூறியுள்ளார்.

அதிரவைக்கும் ஆதாரம்

இதற்கு உதாரணமாக பைபிலில் உள்ள அதிகாரம் 12:1-2-யை இங்கு குறிப்பிடுகிறார்.

“சூரியனை ஆடையாக உடுத்திய ஒரு பெண், காலடியில் நிலவை வைத்துக்கொண்டு பன்னிரண்டு நட்சத்திரங்களை மகுடமாக சூடிக்கொண்டு நிற்பாள்”

பைபில் அதிகரத்தில் குறிப்பிட்டது போலவே அந்த வடிவத்தில் நடசத்திர கூட்டங்கள் ஒரு நேர்கோட்டில் இணைந்தால் கிரகம் x(planet X) எனும் கிரகம் பூமியில் மோதி இந்த உலகம் அழியும் என்று கூறுகிறார். அப்படி எனில் வரும் 23ம் தேதி இந்த உலகம் அழியப்போகிறது என அர்த்தம்.

சரி இதைப்பற்றி நாசா என்ன கூறுகிறது

நாசாவின் கூற்றுப்படி இந்த கிரகம் x என்பதே கட்டுக்கதை சதிக்கோட்பாட்டாளர் டேவிட் மீடே கூறுவது போன்ற கன்னி வடிவ நட்சத்திர கூட்டங்கள் சரியாக ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு ஒரே நேர்கோட்டில் இணையும்.

அதன்படி பார்த்தால் ஒவ்வொரு 1000 வருடங்களுக்கும் ஒருமுறை இந்த உலகம் அழிந்து இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

உண்மையில் இந்த வடிவங்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் ஒரு தொகுப்பாக தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும்.

அதுவே நமது அண்டம் சுருள் வடிவம் (Spiral)) என்று கூறுவதற்கு ஒரு ஆதாரமாகக் கூறப்படுகிறது. அப்படி நகரும் நட்சத்திரங்கள் தமக்குள்ளாகவே சிற்சில குழுக்களாக பிரிந்திருக்கும்.

அது ஏனென்றால் அவை அனைத்தும் நமது சூரிய குடும்பத்தைப் போன்றதுதான். நமக்கு நீள்வட்ட அமைப்பு (eclipse) இருப்பதுபோல் அவற்றுக்கும் ஒவ்வோர் வடிவம் உண்டு. அவை நகர்ந்துகொண்டே இருக்கின்றன. நமது அண்டமும் (Galaxy) தான்.

இப்படிக் கூட்டமாக இருக்கும் மற்ற குடும்பங்கள் நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும். நமக்கு அருகிலிருக்கும் சில அண்டங்கள் (Galaxies) கூட இவ்வாறான நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும்.

உதாரணத்துக்கு ஆண்ட்ரோமீடா (Andromeda Galaxy) என்பது வானில் ஒரு பெண் தனது இரு கைகளையும் தூக்கிக்கொண்டும், ஒரு காலை மடக்கியவாறும் நிற்பது போல் இருக்கும். அது நமக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அண்டம்.

இன்னொரு உண்மை என்னவென்றால் இரவு நேரங்களில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் எதுவும் அந்தச் சமயத்தில் அங்கு இருப்பவையே அல்ல. அவை ஒரு வருடத்துக்கு முன் அங்கு இருந்தவை.

நமது பால்வெளி அண்டம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது. அதில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் சில ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன.

அதன் ஒளி பூமியை வந்தடைய சில வருடங்கள் ஆகும். அதற்குள் அது நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்றுவிடும். ஆகையால் நமது கண்களை அந்த நட்சத்திரங்களின் ஒளி வந்தடையும் நேரத்தில் அங்கே எதுவும் இருப்பதில்லை. ஆம், நீங்கள் பார்ப்பது கடந்த காலத்தை.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நீங்கள் பார்க்கும் சில நட்சத்திரங்களின் ஒளி நம் கண்களை வந்தடைவதற்குள் அழிந்தே போயிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இது விஞ்ஞானம் கூறும் நிரூபிக்கப்பட்ட கூற்று.

கதை இப்படியிருக்க, இல்லாத நட்சத்திரத்தை வைத்து இருக்கும் பூமிக்கு எப்படி ஜோதிடம் பார்க்க முடியும்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் வளர்ந்துகொண்டே இருக்க, சில மக்கள் எதையும் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறு இயற்கைக்கு மாறான கருத்துகளைக் கூறுவதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள முடியுமே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri

671 Shares