இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலும்,மாவட்ட ரீதியிலும் ,கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் நிகழ்வில் சிறப்பான திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வியாழன் காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் தமது திறமைகளை வெளிக்காட்டிய அறநெறி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலர் சோமரத்ன விதான பத்திரன வவுனியா மாவட்ட உதவி மாவட்ட செயலர் நா.கமலதாஸ், வவுனியா நகர பிரதேச செயலர் கா.உதயராஜா ,வவுனியா வடக்கு பிரதேசசெயலர் க.பரந்தாமன் ,செட்டிகுளம் பிரதேச செயலர் கா.சிவகரன் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவி பணிப்பாளர் இ.கர்ஜீன் அறநெறி பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

9 Shares