தந்தை செல்வாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற இரத்தான நிகழ்வு…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், தலைவருமான தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (26) மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில் இளைஞர் அணியின் உபதலைவரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான வி.பூபாளராஜா தலைமையில் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், து.மதன், அ.கிருரஜன் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன். இளைஞர் அணி உறுப்பினர்களால் இரத்ததானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான வைத்தியர் கே.ஹரிசாந் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 Shares