யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது தந்தை செல்வா நினைவு தாபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ் மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பின்கள் மலர் மாலை அணிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவுச் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நினைவுப் பேருரையை நவசமாயவாய கட்சியின் தலைவர. விக்கிரம்பாகு கருணாரட்ன ஆற்றவுள்ளார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், மாநகர முதல்வர் இபானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

5 Shares