ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் அதன் இலங்கைக் கிளையான உதயம் சகவாழ்வு மேம்பாட்டு மன்றத்தின் வருடாந்த ஒன்று கூடலும் நிருவாகத் தெரிவும் இன்று 28 ஆம் திகதி மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வொன்று கூடலானது நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.டிலான் தலைமையில் நடைபெற்றதுடன் இதன் போது வட கிழக்கு மாவட்டங்களில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் பயணாளிகள் அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் நிகழ்வானது முதலில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்குப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் அறிமுகம் நிருவாக சபை தெரிவு கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகள் நிறுவனத்தின் செயற்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ்வொன்று கூடலின் போது ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஜேர்மன் வாழ் பணிப்பாளர் தொலைபேசி தொழில் நுட்பம் மூலமாக நிருவாக உறுப்பினர்கள் பயணாளிகள் மற்றும் மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுடன் அமைப்பின் கொள்கைகள் செயற்பாடுகள் யாப்பின் உள்ளடக்கங்கள் சம்மந்தமாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் ஒன்றுகூடல் நிகழ்வு நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

14 Shares