கடந்த சில மாதங்களிற்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஹாருசனின் பிறந்த தின ஞாபகார்த்தமாக கடந்த சனிக்கிழமை (28.04.2018) அன்று சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 2.00 மணி வரை அவரது நண்பர்கள்  குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.“ உயிருக்கு உதிரம்”  எனும் இவ் இரத்தான நிகழ்வில் 45 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதரண பரீட்சை எழுதி பெறு பேறுகள் வருவதற்கு முன்பாகவே உயிரிழந்த நிலையில் 9 ஏ பெறுபேற்றை பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் இவரின் பெயரால் அறப்பணிகளை மேற்கொள்வதற்காக அவரது நண்பர்களால்  ஸ்தாபிக்கபட்டுள்ள Garusan Charitable Foundation (GCF) எனும் நற்பணி அமைப்பே இவ் இரத்த தான நிகழ்வை ஒழுங்கமைப்பு செய்திருந்தது…

186 Shares