நொச்சி மோட்டைப்பகுதியில் வைத்து அரியவகை வலம்புரி சங்குடன் இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பெறுமதியான இவ் வலம்புரிச்சங்கினை கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு விற்பனைக்காக காரொன்றில் கொண்டு சென்றபோதே மன்னார் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 21 வயது மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

116 Shares