வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டம் இன்றுடன் 444ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காணாமற்போன உறவுகள் தமது பிள்ளைகளைத்தேடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீதியிலிருந்து சூழற்ச்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு காணாமற்போன உறவுகள் பிற்பகல் 12மணியளவில் கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று தேங்காய் உடைத்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பேரணியாக பஜார் வீதிவழியாக ஹொறவப்பொத்தானை வீதிவழியாக இலுப்பையடி சென்று நீதிமன்ற வழியாக போராட்ட களத்தைச் சென்றடைந்து அங்கு காணாமற்போன உறவுகளினால் சத்தியாப்பிரமானம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்றைய போராட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த உறவுகள் அன்னையர் தினத்தை முன்னிட்டு தமது பிள்ளைகளின் விடுதலையை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தும் போராட்டமாகவே அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இன்றைய காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கையின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக வடக்கு கிழக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவினை வழங்கியிருந்ததுடன் பெருமளவு இளைஞர்கள் கலந்து கொண்டு இறுதியில் மனித சங்கிலிப் போராட்டத்தினை மேற்கொண்டு வீதியின் இருபகுதிகளிலும் குழுமியிருந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

26 Shares