ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அல்லலுறும் உறவுகளுக்கு உதவிடுவோம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் வீட்டுத் தோட்ட செய்கையை மேம்பாடுத்துவதற்கான நீர் விநியோகங்கள் அமைத்துக் கொடுக்கும் செயற்பாடு இன்றைய 18.05.2018 நன்நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குரவில் உடையார்கட்டு பகுதியில் வசிக்கும் பயணாளியின் இல்லத்தில் உத்தியோகபூர்வமாக அமைத்துக்கொடுத்து கையளிக்கப்பட்டது.

இதன் போது ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான கிளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.டிலான் பொது முகாமையாளர் ரீ.சுகீர்தரன் மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என்.ஜெயருக்சன் அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த பயணாளி எஸ்.இராஜேஸ்வரன்.

இன்றைய நாளில் நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன் காரணம் நான் கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலையில் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தேன் அதன் பின்னர் எனது குடும்பத்தை நான் தினக்கூலி வேலை செய்து பராமரித்து வந்தேன் இருந்தும் சிரியளவில் வீட்டுத்தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு வீட்டு செலவுகள் பிள்ளைகளது கல்வி செலவு என்பவற்றை முன்னெடுத்துவந்தேன்.

அதன் போது தான் ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தொடர்பு கிடைத்தது அந்தவகையில் செயற்பாட்டாளர்களிடம் எனது குடும்ப சூழ்நிலை தொழில் தொடர்பாக பேசி வீட்டுத் தோட்டத்திற்கான நீர் விநியோக வசதிகளை செய்து தரும்படி கேட்டிருந்தேன்.

அதன் மூலமாக நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் எம்முடன் வேறுபாடுகள் இன்றி சகஜமாக பழகியதுடன் எனது தேவையினையும் பூர்த்தி செய்துள்ளனர் அதன் படி நீர் விநியோக திட்டத்திற்காக ஒரு லட்சம் ரூபா செலவிலான நீர் மோட்டர் பம் அடங்களான நீர் விநியோகத்திற்குத் தேவையான பொருட்கள் வழங்கி அதன் மூலமாக இன்றைய நன்நாளில் அமைத்துக் கொடுத்து பாவனைக்கு வழங்கியுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலமாக வீட்டுத் தோட்டத்தின் கூடிய பயனை அடைய முடியும் என்பதுடன் இவ்வுதவியினை வழங்கிய ஜேர்மன் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஜேர்மன் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கைக்கான செயற்பாட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.என பயணாளியான எஸ்.இராஜேஸ்வரன் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 Shares