நமது உறவுகளின் உயிரைக்காக்க உதவும் நீங்கள் வழங்கும் உதிரம் நாளை உங்கள் உயிருக்கே உதவலாம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் இன்று 20 ஆம் திகதி கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அக்கழகத்தின் தலைவர் ஈ. சாண்டோ இராஜரொட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் கே.விவேகானந்தநாதன் தலைமையிலான வைத்திய குழுமினர்களின் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு வைத்தியப் பணியினை மேற்கொண்டனர்.

இம்முகாமின் கழகத்தின் உறுப்பினர்கள் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் பிரதேசவாசிகள் சமூக சேவகர்கள் என பலரும் இரத்ததானம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்துத் தெரிவித்த கழகத்தின் தலைவர் சாண்டோ இராஜரொட்ணம்.

இன்று எமது கழகத்தின் சார்பில் இச்சமூக சேவையினை முன்னெடுக்கின்றோம் காரணம் எமது கழகத்தில் உள்ள அனைவரும் சமூகத்தின் மத்தியில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் வாயிலாக சில சமுக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம் அதன் ஒரு அம்சமாக இரத்ததான நிகழ்வை முன்னேடுத்துள்ளோம் அத்துடன் அண்மைக்காலமாக சமுகத்தின் உள்ள பிரச்சனை இரத்தம் குறைவினால் விபத்து மரணம் என்பன அதன் படி இவற்றை குறைப்பதற்காகவே இச்செயற்பாடுகளை நடத்துகின்றோம் என அவர் கருத்துத் தெரிவித்தார்.

17 Shares