மே 31ஆம் திகதியான இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் முன்னெடுக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் ஒரு கொடிய உயிர்கொல்லியாக புகையிலை காணப்படுகின்றது.

இந்த புகையிலையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. புற்றுநோய்க்கு முதல் காரணமே இந்த புகையிலைதான்.

புகையிலையில் காணப்படும் இரசாயனங்களில் முக்கியமானவை “கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சயனைடு, ஈயம் (நச்சுவாயுக்கள்), ஆர்சனிக் (எலி மருந்தில் உள்ளது), நாப்தலின் (அந்து உருண்டைகளில் இருப்பது), கந்தகம் (தீக்குச்சிக்கு பயன்படுத்துவது).” ஆகும்.

இவை உடலில் ஒன்று சேர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், புகையிலையில் உள்ள நிகோடின், மூளைக்குச் சென்று புகையிலைக்காக ஏங்க வைக்கும்.

புகையிலை பயன்படுத்துவோரில் 90 சதவீதமானோருக்கு வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

புகையிலையால் கன்னம், நாக்கு, உணவுக்குழாய், சுவாசக்குழாய் என பல இடங்களில் வெள்ளைத்திட்டுக்கள் உருவாகி, அதுவே நாளடைவில் புற்றுநோயாக மாறும்.

அந்த வகையில் இலங்கையில் வருடாந்தம் 25,000 பேர் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றார்கள். அதிலும் நாளாந்தம் 68 பேர் மரணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயிர்கொல்லியான புகையிலை பழக்கத்தை நிறுத்திய 20ஆவது நிமிடத்தில் இருந்து நமது உடல் சுத்தமாகிறது.

ஆகவே எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து இந்த புகையிலை பாவனையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.

69 Shares