வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் வவுனியா மில் வீதியிலுள்ள லீசிங் நிறுவன ஊழியர்கள் அத்துமீறி உள் நுழைந்த இருவர் வீட்டு உரிமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 2015ஆம் ஆண்டு லீசிங் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு மாதாந்த கட்டுப்பணம் கடந்த மூன்று மாதங்களாக கட்டுப்படவில்லை இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை கையகப்படுத்தவதற்கு அவ்வீட்டிற்கு லீசிங் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் பணம் கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களைத் தெரிவித்து கிளை முகாமையாளருக்கு அறிவித்துள்ளேன் சில தினங்களில் பணத்தை ஏற்பாடு செய்து கட்டிவிடுவதாகவும் மோட்டார் சைக்கில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது இதன் இழப்பீட்டுப்பணம் வரவில்லை அது வந்ததும் அனைத்துப்பணங்களையும் திரட்டிக்கட்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வாகனத்தை கையகப்படுத்த வந்த இரு ஊழியர்கள் தாகாத வார்த்தைப்பிரயோகங்களைப்பாவித்து தரக்குறைவாக அவ்வீட்டின் குடும்பத்தலைவியிடம் நடந்துகொண்டபோது இருபகுதியிருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிலின் உரிமையாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் கடந்த 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் பொலிசார் தாக்கிய லீசிங் நிறுவன ஊழியர்ளைக் கைது செய்யவில்லை. இவ்வாறு வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த லீசிங் நிறுவன ஊழியர்கள் மீது பொலிசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வீடுகளுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் வவுனியாவிலுள்ள லீசிங் நிறுவனத்தின் முகாமையாளரிடம் பக்கச்சார்பின்றி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிலின் உரிமையாளர் கோரியுள்ளார்.

இதேவேளை இன்று (02.06) காலை 10மணியளவில் தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் தவறினால் உங்களை 4ஆம் மாடிக்கு கொண்டு சென்று விசாரிப்போம் என்றும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

203 Shares