அன்றாடம் மனிதர்கள் பயன்படுத்தும் பற்பசையில் (Toothpaste) உள்ள இரசாயனம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பற்பசையில் உள்ள ‘டிரைகுளோசன்’ என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு இரசாயனப்பொருள் பார் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பாக்டீரியாவைக் கட்டுப்படுத்துவதால், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரைகுளோசன் இரசாயனத்தை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, எலிகளுக்கு பெருங்குடல் புற்றுநோய் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிரைகுளோசன் இரசாயனம் பெருங்குடலில் சுழற்சி மற்றும் அவை சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி அதன் மூலம் புற்றுநோயாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது.

‘டிரைகுளோசன்’ என்ற இரசாயனப்பொருள் மக்கள் பயன்படுத்தும் சுமார் 2000 தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

4 Shares