இரண்டு பில்லியன் வரையான பயனர்களைக் கொண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமாகத் திகழும் பேஸ்புக் அண்மைக்காலமாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பயனர்களின் பதிவேற்றங்களை (Posts) அனைவருக்கும் தெரியக்கூடிய வகையில் (Public) மாற்றியமைத்ததாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பயனர்கள் தமது போஸ்ட்களை குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரம் தெரியக்கூடிய வகையில் Private முறையில் போஸ்ட் செய்வதுண்டு.

இவ்வாறு போஸ்ட் செய்யப்பட்டவற்றினை Public முறைக்கு அந்நிறுவனம் மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 மில்லியன் வரையானவர்களின் போஸ்ட்கள் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 Shares