இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைகளுடன் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் நிதி மோசடி தொடர்பில் பத்து முறைப்பாடுகள் இந்தண்டில் இதுவரையில் பதிவாகியுள்ளன.

மேலும், இணையம் மற்றும் முகநூல் பயன்பாடு குறித்த 1100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ரோசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

36 Shares