நாசா ஆராய்ச்சி மையம் விதம் விதமான விண்வெளி ஆராய்ச்சிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததுதான், அந்த வகையில் இரட்டையர்களில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது நாசா.

விண்வெளி வீரர்களான ஸ்காட் மற்றும் மார்க் கெல்லி ஆகிய இருவரும் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டனர்.

இதில் ஸ்காட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் அனுப்பப்பட்டார். அவரது சகோதரர் மார்க் பூமியில் இருந்தவாறே தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

இப்போது ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இரட்டையர் அல்ல என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி குழு கூறியிருக்கிறது.

காரணம் இவர்கள் இருவரின் DNA வும் தற்போது வேறு வேறாக மாறியிருக்கின்றன. இங்கிருந்து கிளம்பும்போது இருவரின் மரபணுவும் ஒரே மாதிரி இருந்திருக்கிறது.

ஸ்காட் பூமிக்கு வந்து ஆறு மாதம் ஆனபிறகு மீண்டும் DNA சோதனை செய்யப்பட்டதில் அதில் இவ்விருவருக்கும் இடையே பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்பு 97 சதவிகிதம் ஒன்றாக இருந்த மரபணு விண்வெளிக்கு சென்று விட்டு வந்த உடன் 7 சதவிகிதம் குறைந்து 90 சதவிகித ஒற்றுமைகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.

மேலும் உருவ அமைப்பிலும் மாறுபாடு இருக்கிறது. அதுமட்டும் இன்றி ஸ்காட் மார்க்கை விட பலவிதங்களில் பின்தங்கி இருக்கிறார். ஆகவே இனி இவர்கள் இரட்டையர்கள் இல்லை என்று நாசா அறிவித்துள்ளது.

இவர்கள் மீதான சோதனை மேலும் தொடர்கிறது.

34 Shares