அமெரிக்காவைச் சேர்ந்த அலிஸ்ஸா கார்சன் என்ற 17 வயது பெண்ணிற்கு செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வதற்காக நாசா தீவிர பயிற்சி அளித்து வருகிறது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த பெண் அலிஸ்ஸா கார்சன்(17). செவ்வாய் கிரகத்திற்கு முதல் முறையாக மனிதரை அனுப்பும் திட்டத்திற்கு நாசா இவரை தெரிவு செய்துள்ளது.

அதன்படி, அலிஸ்ஸாவிற்கு 13 வயதிலிருந்தே விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சியை நாசா தொடங்கிவிட்டது. வரும் 2033ஆம் ஆண்டில் அலிஸ்ஸா செவ்வாய் கிரகத்திற்கு சென்று விடுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அலிஸ்ஸா கார்சனுக்கு செவ்வாய் கிரக பயணத்திற்கு இப்போது சரியான வயது தான் ஆகிறது. உண்மையில், ஒரு விண்வெளி வீராங்கணையாக வலம் வருவார்.

அதற்கு தற்போது சரியான முடிவு எடுத்துள்ளார். அதற்கு நாங்கள் சரியான வழிமுறைகளை பயிற்சி கொடுத்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலிஸ்ஸாவின் தந்தை கூறுகையில், ‘விண்வெளி ஆபத்துக்கள் குறித்து அவரிடம் கலந்து ஆலோசனை செய்துள்ளேன். அவள் அவளது முடிவில் திடமாகவும், 2033-யில் தனது கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

தொலைக்காட்சியில் விண்வெளிப்பாதை கார்ட்டூன் கதாபாத்திரங்களின் படங்களை பார்த்து தான் அதுபோல் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை தூண்டியது என்று தெரிவித்தார்.

மேலும், அவர் தன் குழந்தை பருவத்தை ஒரு யதார்த்தமான கனவைப் பற்றிக்கொள்ள அவள் வாழ்க்கையின் சிறந்த முடிவை எடுத்துள்ளார். அவளது விருப்பத்தை அறிந்து முழு ஊக்கம் அளித்து வருகிறோம்.

அலிஸ்ஸா, கடந்த 12 ஆண்டுகளாக ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நடந்த நாசா விண்வெளி முகாம்களில் கலந்து கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முடிவில் உறுதிபாட்டை பார்த்து பல்வேறு சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அலிஸ்ஸா தான் பயிற்சி செய்யும் புகைப்படம், வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அலிஸ்ஸா பல்வேறு தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகளை விரைவாக கற்றுக்கொள்கிறார் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 Shares