நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களது பதவிகளில் நீடிப்பது தொடர்பில் சவால்கள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டதோடு, புலிகளுக்கு சார்பான நிகழ்வுகளில் பங்கேற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் கிடட்ததுள்ளதாக கூட்டு எதிரணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் வெளியான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிப்பதோடு, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவுள்ளதாகவும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு கருத்துக்களை வெளியிடுவதோடு, பிரிவினவாதிகளை ஊக்குவிக்கும் விழாக்களில் பங்கேற்பது தீவிரவாத செயற்பாட்டுக்கு ஆதரவளிப்பதாகவே அமையுமென்பததோடு, அத அரசியல் யாப்பினை மீறும் செயலெனவும் சட்டத்தரணி பிரதீபா மஹநாமஹேவா தெரிவிக்கின்றார்.

இவ்வாறு யாப்புக்கு எதிராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

26 Shares