உணவில் பயன்படுத்தப்படும் காய்களில் வாழைக்காய் மிக சிறந்தது என்று தான் சொல்லலாம்.

வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது.

வாழைக்காயை நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால் பித்த வாந்தி, பயித்தியம், பித்தாதிசாரம், உமிழ்நீர்ச் சுரப்பு, வயிற்றுளைதல், உஷ்ணம், இருமல் ஆகியப் பிணிகள் போகும்,இரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் உண்டாகும்.

என்னென்ன பிரச்சினைக்கு வாழைக்காயை எப்படி சாப்பிடலாம் என்று பார்ப்போம்

வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால், பசி மிக விரைவாக அடங்கி விடும்
வாழைக்காயில் சீரகமும் மிளகும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு 4 பல், உப்பு, ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

வாழைப் பிஞ்சினை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்கும்.

வாழைக்காயினை சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரணக் கோளாறு நீங்கும்.

20 Shares