இறைச்சி, பால் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுச் செல்ல பயன்படும் வகையில், குளிரூட்டல் வசதிகளைக் கொண்ட முதலாவது ஓட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மலேசிய நிறுவனம் ஒன்று குறித்த ஒட்டோவை அறிமுகம் செய்துள்ளது. இதிலுள்ள குளிரூட்டி சூரிய சக்தியால் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மின்சாரத்துக்காக செலவிடப்படும் பெருமளவான பணத்தை சேமிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த ஓட்டோவில் ஒரே நேரத்தில் 1000 லீற்றர் பால் அல்லது இறைச்சி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட உற்பத்திகளாக 300 கிலோவை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

97 Shares