வவுனியாவில் இன்று காலை பூட்சிற்றிக்கு அருகேயுள்ள சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவு கூரப்பட்டுள்ளது. தமிழ் விருட்சம் அமைப்பு நகரசபையினர் இணைந்து ஏற்பாடு செய்த நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார்.

வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ். சந்திரகுலங்கம், சு. கண்டீபன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம். முல்லைக்குமரன், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர். எஸ். எஸ். வாசன், சமூக ஆர்வலர் விக்னா, வைத்தியர் மதுரகன் ,பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

24 Shares