எதிர்வரும் 27ஆம் திகதியான பௌர்ணமி தினத்தன்று இலங்கை உட்பட சில நாடுகளுக்கு முழுமையான சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் “ரெட் மூன்” என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், இலங்கை நேரப்படி இரவு 10.45 மணியளவில் இருந்து, மறுநாள் அதிகாலை 4.58 வரை சந்திர கிரகணம் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எந்த வேலையும் செய்யக் கூடாது, அவர்கள் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது.

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும், அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகளை பாதித்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று நம்பப்படுகின்றது.

ஆனால், இந்த நாளில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் தெய்வ சிந்தனையுடன் இருந்தால் குறையில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு விட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும், கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொண்டு, தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும் என சில பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.

கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தை பார்க்கக் கூடாது.

மேலும், கிரகண நேரத்தின் போது வெளியே சென்றால் கதிர்வீச்சுக்களினால் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

அத்துடன், கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது என்றும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப் பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.

இந்த பாதிப்பை `கிரகண மூலி’ என்றும் சொல்கிறார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் பத்திரமாக இருப்பது நல்லது.

சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர் நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்து விடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே வரிசையில் வரும் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். இது கேது உடன் சந்திரன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது.

கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது.

இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

166 Shares