மன்னார் சதொச மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான தகவல்களை நீதவான் நீதிமன்ற பதிவாளரூடாக வௌியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவானால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஸ தெரிவித்தார்.

அதற்கமைய, நீதவான் நீதிமன்ற பதிவாளரூடாக உத்தியோகபூர்வ தகவல்களை ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் மன்னார் நீதவான் தினமும் நேரில் சென்று அவதானிப்பதாகவும் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

22 Shares