தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணை நடத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று காலை ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. என்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணை நடத்தி வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான பல்வேறு தீர்வுகள் அடங்கிய யோசனை எதிர்வரும் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்ய தயார் நிலைகள் காணப்படுகின்றன. இவை சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி அலரிமாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

31 Shares