சற்றுமுன் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதிக்கு முன் உள்ள பண்ணை ஒன்றிற்கு அருகில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர் இதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகிறது.

குறித்த விபத்து முறுகண்டிப் பகுதியிக் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று பண்ணைப்பகுதியில் திடீர் என குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் மோதுண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கண்டர் வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயங்களுக்கு உள்ளானவர்களில் மோட்டார் சைக்கிள் சாரதியின் நிலமையே கவலைகிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

746 Shares