பாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும் இன்று பல வருடங்களுக்கு முன்பு தன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவம் பற்றி கூறியுள்ளார் அவர்.

இது நடந்து 13 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என அவரே கூறியுள்ள நிலையில், அதன் பின் நடந்த திருமணத்தின் போது ஏன் வைரமுத்துவின் காலில் விழுந்தீர்கள் என சிலர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, “அப்போது என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரியாது. வைரமுத்துவின் மகன்கள் இருவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்களை அழைக்கும்போது அவர்களின் அப்பா வைரமுத்துவை எப்படி அழைக்காமல் விட முடியும்” என கூறியுள்ளார்.

https://twitter.com/Calmrade/status/1049674166197207041

19 Shares