ரஷ்யாவில் விமானம் ஒன்று ஓடுதளத்திலிருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்த போதும், அதில் பயணித்த 96 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

யகுட்ஸ்க் விமான நிலையத்தில் வந்திறங்கிய சுகோய் எனப்படும் SSJ100 என்ற விமானமே புதன்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தேங்கிய பனியால் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையின் தூரத்தை மீறி விமானம் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சிறப்பாக செயற்பட்ட விமானி, பெரும் சேதம் ஏற்படாதவகையில் விமானத்தை நிறுத்தி, அதிலிருந்த 91 பயணிகள், 5 பணிக்குழுவினரை பாதுகாத்துள்ளார்.

இருந்தபோதும், விபத்து குறித்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

11 Shares